பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு - பிரதமர் மோடி, நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெயச்சந்திரன் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றும், அவரது ஆத்மார்த்தமான பாடல்கள் வரும் தலைமுறையினரின் இதயங்களை தொடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கிய ஜெயச்சந்திரன் பல்வேறு உணர்வுகளை குரலின் மூலமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் என தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை  வருத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Night
Day