பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்தபோதுதான் அவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டேன் - நடிகர் பிரசாந்த்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது புதிய படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்த பிறகுதான் பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளின் கஷ்டம், தனக்கு புரிந்ததாக நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக 'டிரைவ் டிஜிட்டல் பிரெய்ல்ஸ் ஆன் வீல்ஸ் கார் ரேலி' நடைபெற்றது. இதில் 34 கிலோ மீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, பார்வை மாற்றுத்திறனாளிகள் வழிகாட்டுதலுக்கு இணங்க, ஓட்டுநர்கள் கார் ஓட்டினர். போட்டியை நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நடிகர் பிரசாந்த் இருவரும் தொடங்கி வைத்தனர். தனது புதிய படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்த போதுதான், அவர்களின் கடினமான வாழ்க்கை குறித்து தான் உணர்ந்து கொண்டதாக நடிகர் பிரசாந்த் உருக்கமாக தெரிவித்தார். 

Night
Day