பிக்பாஸ் நிகழ்ச்சி - கமல்ஹாசன் தற்காலிகமாக விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து தான் விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினிமாவில் அதிக வேலைப்பளு உள்ள காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 7 சீசன்களாக மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. தற்போது 8வது சீசனை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 7 சீசன்களாக தனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றும் இந்த நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Night
Day