பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா பானு

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்து பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதனை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதி செய்துள்ளார். திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இருவரின் 29 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆஸ்கர் விருது பெற்றுள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் 1995ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் கதீஜா, ரஹீமா ஆகிய மற்றும் அமீன் என்ற ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ரஹ்மானை, அவரது மனைவி சாய்ரா பானு பிரிந்து செல்வதாக அவரது வழக்‍கறிஞர் வந்தனா ஷா  வெளியிட்ட அறிக்கையை ஆங்கில செய்தி ஊடகம் மேற்கோள் காட்டி உள்ளது.

அதில், திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து,கணவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்து உள்ளார் என்றும், இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியது. இந்த இடைவெளியை யாராலும் சரி செய்ய முடியாது என்ற நிலையில்,  ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனை மற்றும் சோகமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். இந்த சவாலான நேரத்தில், வாழ்க்கையில் கடுமையான காலகட்டத்தை கடந்து செல்லும் தங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அண்மையில் ஏ ஆர் ரகுமானின் சகோதரி மகனான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்த நிலையில் இந்த விவாகரத்து அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day