பிரபல காமெடி நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.

மறைந்த கோதண்டராமன், ராம்கி நடித்த எல்லாமே என் பொண்டாட்டிதான், முரளி நடித்த எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ்மோர் உள்ளிட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராகவும், விஜய், அஜீத் நடித்த பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். இதுமட்டுமன்றி அந்நியன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் சிறு காதாபாத்திரங்களில் நடித்த கோதண்டராமன் உடல் நலக்குறைவால் இன்று பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர். அவரது உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Night
Day