பிரபல நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

Buffy the Vampire Slayer மற்றும் Gossip Girl படங்களில் நடித்த பிரபல நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க் காலமானார். 


காலை 8 மணி அளவில் மன்ஹாட்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகை மிச்செல் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நடிகை மிச்செல் உயிரிழந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Night
Day