புதுச்சேரி - விஜய் ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் 'GOAT' திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தின், படப்பிடிப்பு புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி. பஞ்சாலையில் நடைபெற்றது. இதையறிந்த, ரசிகர்கள் நடிகர் விஜய்யை காண அங்கு குவிந்தனர். இதனையடுத்து, விஜய் படப்பிடிப்பு வாகனத்தின் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்றார். இதனால், புதுச்சேரி - கடலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Night
Day