புஷ்பா 2 திரைப்படத்தின் இயக்குநர் சுகுமார் வீட்டில் ஐ.டி சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களை தொடர்ந்து, ‘புஷ்பா’ திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேம்சேஞ்சர், வாரிசு உள்ளிட்ட படங்களை தயாரித்த தில்ராஜு மற்றும் புஷ்பா, ரங்கஸ்தலம் போன்ற வெற்றி படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, ஹைதராபாத்தில் அவர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, 2வது நாளாக தில் ராஜு, மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினர் தொடர்புடைய 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் வெளியான புஷ்பா 2, கேம் சேஞ்சர், சங்கராந்திக்கு ஒஸ்தானு ஆகிய திரைப்படங்கள் தொடர்பான வருவாயில் பெருமளவு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Night
Day