சினிமா
டிசம்பரில் தொடங்கும் Farzi 2 வெப்தொடரின் படப்பிடிப்பு
Farzi 2 வெப்தொடரின் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூ?...
பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம், உலகளவில் 230 கோடி ரூபாய்க்கு வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சிராஜ் வலியத்தரா என்பவர் மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் பாய்ஸ் படத்துக்காக 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், படம் வெளியான பிறகு படத்தின் லாபத்தில் இருந்து 40 சதவீதம் தொகை தருவதாக தயாரிப்பாளர் ஷான் ஆண்டணி உறுதி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் லாபம் மட்டுமல்லாமல் முதலீடு செய்த பணத்தைக்கூட திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர்கள் 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்யும்படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி தயாரிப்பாளர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Farzi 2 வெப்தொடரின் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூ?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...