மன்னிப்பு கோரினார் நடிகர் மோகன்லால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை குறிப்பிட்டதற்காக மலையாள நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்புரான் படத்தில் இருந்த சில அரசியல் மற்றும் சமூக கருப்பொருள்கள்  பல அன்புக்குரியவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதை அறிந்துள்ளதாக கூறியுள்ளார். ஒரு கலைஞராக, தனது படங்கள் எதுவும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதப் பிரிவிற்கும் விரோதமாக இல்லை என்பதை உறுதி செய்வது தனது கடமை என்றும் எனவே, அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு தானும் எம்புரான் குழுவினரும் மனதார வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு தசாப்தங்களாக உங்களில் ஒருவராக வாழ்ந்து வரும் தனக்கு உங்கள் அன்பும் நம்பிக்கையும்தான் ஒரே பலம், அதை விட பெரிய மோகன்லால் இல்லை என்று  நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day