மரண மாஸ்ஸான லுக்கில் தி லெஜெண்ட்: அடுத்த படத்தின் அப்டேட் வெளியீடு !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜெண்ட் சரவணா ஸ்டோரின் நிர்வாக இயக்குநரான சரவணன் நடித்த தி லெஜெண்ட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 28ம் தேதி திரையரங்களில் வெளியாகி இருந்தது . அத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. 

தி லெஜெண்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எதிர்நீச்சல்,கொடி, கருடன் ஆகிய  படங்களின் இயக்குநரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் தி லெஜெண்ட் சரவணன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குநர் துரை செந்தில் தனது X - தளத்தில் தெரிவித்துள்ளார் . அதுமட்டுமின்றி லெஜெண்ட் சரவணனின் மாஸ்ஸான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்  இதனை கண்ட இணையதள வாசிகள் பலரும் ட்வீட் செய்து  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Night
Day