முதன் முறையாக ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படும் 'தலைவர் 171'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகர் ரஜினியின் தலைவர் 171 திரைப்படம் ஐமேக்ஸ் கேமரா மூலம் படமாக்கப்பட உள்ளது. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு, அடுத்தபடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை, ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் ரஜினியின் வயதை குறைத்து காட்டுவதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓப்பன்ஹெய்மர், கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் வரிசையில் தலைவர் 171 திரைப்படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படவுள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஐமேக்ஸ் கேமரா மூலம் இப்படம் உருவாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

Night
Day