மெலிந்த தேகத்துடன் தோன்றிய நடிகை சமந்தா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 நடிகை சமந்தா ஒல்லியான தேகத்துடன் மாறியுள்ளதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த காலங்களில் மையோசிடிஸ் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதற்காக படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியிருந்த சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, ஒல்லியான தேகத்துடன் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது, சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day