யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மனைவியை பிரியும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூ டியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு தம்பதி தங்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அறிவித்தனர். இதனை பலர் சமூக ஊடகங்களிலும், யூடியுபுகளிலும் வீடியோக்கள் மூலம் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அப்படி நீக்காவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது,

Night
Day