ரசிகரை தள்ளிவிட்ட நாகர்ஜூனாவின் பாதுகாவலர்கள் - வீடியோ வைரலான நிலையில், மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விமான நிலையத்தில் தனது பாதுகாவலர் வயதான ரசிகரை தள்ளிவிட்ட சம்பவத்திற்கு நடிகர் நாகர்ஜூனா மன்னிப்பு கோரினார்.

பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனா தற்போது தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் விமான நிலையம் சென்ற அவரை, வயதான ரசிகர் ஒருவர் நெருங்கி சென்றுள்ளார். அப்போது நாகர்ஜுனாவின் பாதுகாவலர் முதியவரை தள்ளிவிடவே, அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதனை நாகர்ஜூனா கண்டுகொள்ளாமல் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாகர்ஜூனா, இந்த சம்பவம் தற்போதுதான் தனது கவனத்திற்கு வந்தது என்றும், இதற்காக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் கவனமாக பார்த்து கொள்வேன் என்றும் பதிவிட்டுள்ளார். 

Night
Day