ரஜினியுடன் லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் இருக்கும் புகைப்படம் வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியுடன் இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைராகி வருகிறது. 


இயக்குனர் லோகேஷின் கூலி படத்தை முடித்துவிட்டு, தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படிப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ரஜினி மற்றும் நெல்சனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜெயிலர், கூலி, பேட்ட ஒரே இடத்தில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Night
Day