ரூ.95 கோடி கொடுத்து நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், இதில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை 95 கோடி ரூபாய் கொடுத்து நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் திரையுலக பயணத்தில் மிக அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமம் விற்பனையான முதல் படம் என்ற பெருமையை குட் பேட் அக்லி பெற்றுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Night
Day