எழுத்தின் அளவு: அ+ அ- அ
‘லப்பர் பந்து‘ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம், 'லப்பர் பந்து'. கடந்த மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், பட்டி தொட்டி எங்கும் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், லப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், 25 நாட்களை கடந்து தற்போதும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ஓ.டி.டி தேதியை ஒத்திவைப்பதாகவும், விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாகவும் சிம்பிளி சவுத் ஓ.டி.டி நிறுவனம் அறிவித்துள்ளது.