வடிவேலு மானநஷ்ட வழக்கு - சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் வடிவேலு குறித்து யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக மான நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி பேசியதில் துளிகூட உண்மையில்லை என குற்றம்சாட்டி நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திரையுலகில் அவர் வளர முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியால் மக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, 5 கோடி ரூபாய் மான நஷ்டஈடு  கேட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், நடிகர் சிங்கமுத்து 2 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

Night
Day