வரும் 26-ம் தேதி கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சூர்யா நடுத்துள்ள கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகும் நிலையில், கங்குவா படத்தின் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 26ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

varient
Night
Day