'கங்குவா' திரைப்படத்துக்கு போட்டியாக வெளியாகும் 'வேட்டையன்'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு போட்டியாக வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. ஜெய் பீம் பட புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில், ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதேநாளில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாவதால் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Night
Day