'கோட்' படத்தின் 3வது பாட​லை 15 லட்சத்துக்‍கும் மேற்பட்​டோர் பார்த்து ரசிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நேற்று மாலை வெளியானது. நடிகர் விஜய் - வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்‍கு வருகிறது. யுவன் சங்கர்ராஜா இசையில் அண்மையில் வெளியான கோட் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றவாது பாடலான ஸ்பார்க் என்னும் பாடல் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. இந்த பாடல் வெளியான 3 மணி நேரத்துக்‍குள் 15 லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 

varient
Night
Day