'மூன்றாம் பிறை' வெளியாகி 42 ஆண்டுகள் நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் ஆதரவுடன் பெரும் ​வெற்றி ​பெற்ற மூன்றாம் பிறை திரைப்படம் வெளியாகி 42 ஆண்டுகள் ஆனதை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொண்டாடி உள்ளது. பாலுமகேந்திரா இயக்‍கத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க்‍ ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு மூன்றாம் பிறை திரைப்படம் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி 42 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சத்யஜோதி பிலிம்ஸ் எக்‍ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  காலத்தால் அழியாத திரைக்‍காவியம் மூன்றாம் பிறை படம் என பதிவிட்டுள்ளது. 

Night
Day