6 தமிழ் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

"லாபட்டா லேடீஸ்" திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக அனுப்பப்பட தேர்வாகி உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கு என தனி பிரிவை ஒதுக்கி வருடம் வருடம் ஆஸ்கர் நிறுவனம் விருதினை வழங்குகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதிற்கு அனுப்ப 6 தமிழ் திரைப்படங்கள், 5 மலையாள திரைப்படங்கள், 10 ஹிந்தி திரைப்படங்கள், 3 மராத்தி திரைப்படங்கள், 3 தெலுங்கு திரைப்படங்கள், ஒரு ஒரியா திரைப்படம் உட்பட மொத்தம் 29 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியில் கிரண் லால் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

Night
Day