7 ஆஸ்கர் வென்ற 'ஓப்பன்ஹெய்மர்' ஜப்பானில் முதல்முறை வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஓப்பன்ஹெய்மர் திரைப்படம், ஜப்பானில் 29ஆம் முதல் திரையிடப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் சுமார் 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவர், அந்தக் குண்டுகளை உருவாக்கினார். அவர் குறித்த படத்தை ஜப்பானில் திரையிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. இதனால், ஜப்பானில் வெளியாகாமல் இருந்த திரைப்படம், இன்று முதல்முறையாக திரைக்கு வந்துள்ளது. ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள ஓப்பன்ஹெய்மர் படம், மிகுந்த எச்சரிக்கை அறிவிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

Night
Day