எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி மாவட்டத்தில், "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" மேற்கொள்ளவிருக்கும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்துக் காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி மாவட்டத்தில், வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை, "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" மேற்கொள்கிறார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள், கோவை கந்தன், உளுந்தூர்பேட்டை உதயகுமார், வேளச்சேரி சின்னத்துரை, அரசன், சிவராஜ், ராமசுப்பு, மாடசாமி என்ற செல்வம், உதயகுமார், சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், வழக்கறிஞர் பூசத்துரை உள்ளிட்ட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டு, தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாகவும், புரட்சித்தாய் சின்னம்மா, ஒவ்வொரு பகுதியிலும் மக்களை சந்திக்கும் போது, அளிக்க வேண்டிய வரவேற்பு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.