தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வரும் 13ம் தேதி முதல் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" தொடர்ந்து மேற்கொள்கிறார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 18ம் தேதி வரை, கழகத் தொண்டர்களையும் பொதுமக்களையும் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்திக்கிறார்.
கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" தொடர்ந்து மேற்கொள்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மக்கள் பயணமாக, புரட்சித்தாய் சின்னம்மா, தொடர்ந்து பயணிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளாக வருகின்ற 13ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியிலும், இரண்டாம் நாளாக வரும் 14ம் தேதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும், மூன்றாம் நாளாக 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும் புரட்சித்தாய் சின்னம்மா, "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" மேற்கொள்கிறார் - தொடர்ந்து நான்காம் நாளாக 17ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலும், ஐந்தாம் நாளாக 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ராதாபுரம் சட்டமன்ற தொகுதியிலும் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" மேற்கொண்டு அங்குள்ள மாநகர, நகர, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார் -
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மேற்கொள்ளும் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்" கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மா வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.