"இனி ஆண்டுதோறும் ராமர்கோயிலை தரிசிக்க வருவேன்" - நடிகர் ரஜினிகாந்த்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இனி ஆண்டுதோறும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த வகையில், ரஜினி, அமிதாப்பச்சன் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்பிய போது, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 'அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் என்று குறிப்பிட்டார். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததை தனது வாழ்நாள் பாக்கியமாக கருதுவதாகவும் ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோயிலை தரிசிக்‍க வருவேன் என்று தெரிவித்தார்.

Night
Day