"சட்ட விதிகளை மீற முடியாது " - சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் உடலை, பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். 

அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், 
ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது என தெரிவித்தார்.
சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம், குறுகிய சாலை மற்றும் நெருக்கடியான இடம் என்பதால் அவ்விடத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார்.

Night
Day