"சாதி மறுப்பு திருமணம் செய்த தங்கள் பெண்ணை ஒப்படையுங்கள்" காலில் விழுந்து கதறிய உறவினர்கள்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை ஒப்படைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் நிர்வாகியின் காலில் விழுந்து தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் கதறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் என்பவரும் பெருமாள் படத்தைச் சேர்ந்த உதய தரட்சாயினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உதய தட்சாயினி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ரெட்டியார்பட்டியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர் கட்சி அலுவலகத்தை சூரையாடி அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  பெண்ணின் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் நிர்வாகியின் காலில் விழுந்து கதறி அழும் காட்சி வெளியாகியுள்ளது.

Night
Day