"சொத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க காரணமானவர் அண்ணல் அம்பேத்கர்" - புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை உருவாக்கியதில் அண்ணல் அம்பேத்கரின் பங்கு மிக அதிகம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சமூகநீதி போராளியான அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடியவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டினார்.

Night
Day