"தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக முதலமைச்சர் பகல் கனவில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோபாலபுரம் வீட்டை தாண்டி வெளியில் இருக்கும் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி அரசில் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம் மற்றும் நிதி பகிர்வு மூன்றரை மடங்கு வரை உயர்ந்துள்ளதாக கூறினார். முதலமைச்சருக்கு தான் இன்றைய தினங்களில் டப்பிங் தேவைப்படுகிறது என்றும் அவருடைய குரலாக அறிவாலயத்திலிருந்து பல பேர் பேசிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டிய அண்ணாமலை, தமிழகத்தில் ஒரு உதவாத துறை இருக்கிறது என்றால் அது இந்து அறநிலையத்துறை தான் என்று சாடினார். தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

Night
Day