"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம்" - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, உதயத்தூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட உதயத்தூர் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகைதந்தபோது, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளத்துடன் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது.


உதயத்தூர் பகுதியில் பொதுமக்‍கள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சியில் தமிழக மக்‍கள் மிகுந்த இன்னலுக்‍கு ஆளாகியுள்ளதாகவும், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதற்கு முடிவுகட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

புரட்சித்தாய் சின்னம்மா ராதாபுரம் செல்லும் வழியில் இசக்கியம்மன் கோயிலில் அவருக்‍காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிரசாதங்களை கோயில் நிர்வாகிகள் சின்னம்மாவிடம் வழங்கினார்கள். சின்னம்மாவுக்‍கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள், இசக்கியம்மன் கோயிலுக்கு வர வேண்டுமென கோரிக்‍கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, புரட்சித்தாய் சின்னம்மா இசக்கி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். சின்னம்மா வருகையையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

சுவாமி தரிசனம் நிறைவடைந்த பின்னர், அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் 'புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க' என வாழ்த்து முழக்கமிட்டனர். சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மீண்டும் நீங்கள்தான் ஆட்சிக்கு வருவீர்கள்" என அப்பகுதி மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் உறுதிபடத் தெரிவித்தனர்.


 

Night
Day