"தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட்" - தயாரிப்பு பணியில் இளைஞர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், வரும் 2028ம் ஆண்டு குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த மென் பொறியாளர் லிவான்ஸ் அமுதன் மற்றும் நவீன் வேலாயுதம் ஆகியோர் இணைந்து, காஸ்மிக் போர்ட் என்ற சிறிய ரக ராக்கெட் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். அதில், மீத்தேன் ஆக்சிஜன் எரிபொருளை கொண்டு இயக்கும் ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 2026ம் ஆண்டு இரண்டாம் கட்டச் சோதனை நிறைவடைந்து, 2028ம் ஆண்டு, 600 கிலோ எடையினை கொண்டு செல்லும் ராக்கெட், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து ஏவப்பட தயாராகி வருவதாக, காஸ்மிக் போர்ட் நிறுவன தலைமை அதிகாரி நவீன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

Night
Day