"தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது" - தமிழக ஆளுநர் எக்ஸ்தளத்தில் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 


எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநில அரசின் கடுமையான இருமொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களின் இளைஞர்களுடன் ஒப்பிடும் போது தென் தமிழக இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உள்ளதாக தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும்கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக இருப்பதாகவும் மொழியை படிப்பதற்கான தேர்வு இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Night
Day