எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவிலேயே இதுவரை நாங்கள் பார்த்த முதலமைச்சர்களிலேயே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோசமான ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறாவிடில், 2026 தேர்தலில் திமுக ஏமாந்து விடும் என சூளுரைத்துள்ளனர்.
காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஊதிய முரண்களை களைய வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, செவ்வாய் கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதிலி் பங்கேற்ற அரசு ஊழியர்கள், பேச்சுவார்த்தை என்று சொல்லி போராட்டத்தை முடக்காதே, அடக்குமுறை அதிகாரங்களை தூள் தூளாக்கிவிடுவோம் என முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், இந்தியாவிலேயே இதுவரை நாங்கள் பார்த்த முதலமைச்சர்களிலேயே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோசமான ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என குற்றம்சாட்டினர். தங்களை ஏமாற்றினால், 2026-ல் தேர்தலில் திமுக ஏமாந்து விடும் என்றும் எச்சரித்தனர்.
நான்காண்டு காலம் அவகாசம் கொடுத்தும், தற்போது அரசு 4 வாரம் அவகாசம் கேட்பது என்பது, தங்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து, தங்களை பிளவுபடுத்தும் தவறான போக்கை அரசு கடைபிடித்து வருவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
அடுத்த கட்ட போராட்டம் முழுநேர வேலை நிறுத்த போராட்டமாக நடைபெறும் என அறிவித்த நிலையில், ஜாக்டோ ஜியோவின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து ஜாக்டோ ஜியோவின் உயர்நிலைக்குழு கூடி ஆலோசித்து முடிவெடுப்போம் என கூறினார்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜாக்டா ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு விளம்பர திமுக அரசு செவிசாய்க்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.