"பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேச திமுகவினருக்கு தகுதியில்லை" - சீமான் பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காவல் துறை விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் இல்லை என்றும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில், சென்னையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிய சீமானிடம் ஒரு மணி நேரரத்திற்கும் மேலாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணை முடிவுற்றதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காவல் துறை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உரிய விளக்கமளித்ததாக தெரிவித்தார். தேவைப்படும் பட்சத்தில் காவல் துறை விசாரணைக்கு மீண்டும் ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார்கள் என குறிப்பிட்டார். 

தன் வீட்டுக்கு காவலாளிகள் பணியில் யாரும் அமர்த்தப்படவில்லை என்றும், தன் மீதான பாசத்தால் தனக்குரிய பாதுகாப்பை அளித்து வந்தவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என சீமான் குறிப்பிட்டார். அவரையும், கட்சி தொண்டர் ஒருவரையும் காவல்துறை அடித்து துன்புறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

Night
Day