"புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்" வாசகங்களுடன் வீதி, வீதியாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுகவின் 53 வது தொடக்க விழாவையொட்டி, செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் , 'கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்'என்றும், '2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று, புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்' என்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்துநிலையம், பேரூராட்சி அலுவலகப் பகுதி, சிங்கவரம் சாலை, வட்டார வளர்ச்சி அலுவலகப் பகுதி, தேசூர் பாட்டை சாலை,  வளத்தி கூட்டுசாலை, அப்பம்பட்டு, பொன் பத்தி உள்ளிட்ட பல இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அஇஅதிமுகவின்  53வது தொடக்கவிழாவையொட்டி,  'கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. '2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று, புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்' என்றும் இந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


'புரட்சித்தாய் சின்னம்மா தலைமை தாங்கி, அனைவரையும் ஒன்றிணைத்து, கட்சியை வழி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றிடவும், சிறப்பாக வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்வர வேண்டும்' என்று கழக தொண்டர்கள் அழைப்பு விடுக்கும் வாசகங்களும் இந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம், விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் சுதாகர், தொகுதி பொறுப்பாளர் நீலாறு ஏழுமலை உள்ளிட்டோரின் பெயர்களும் இந்த சுவரொட்டிகளில் இடம் பெற்றுள்ளன.

Night
Day