"மண்சரிவே ஏற்பட்டாலும் வெளியேற மாட்டோம்" - மக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்‍கும் 300-க்‍கும் மேற்பட்ட மக்‍கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று கூறியும் நான்கு மாட வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மலையின் பல்வேறு இடங்களில் நிலசரிவுகள் ஏற்பட்டது, வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதை உண்டு உயிரிழந்தனர், இந்நிலையில் மலை அடிவாரத்தில் பட்டா இன்றி வசித்து வரும் ஆயிரத்து 530 வீடுகளை சேர்ந்த மக்‍களில் பெரும்பாலானோர் இங்கிருந்து வீட்டை காலி செய்ய விருப்பமில்லை என கூறியதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். பே கோபுரம் அருகே மறியலில் ஈடுபட்ட 100-க்‍கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Night
Day