"மதுவை ஒழிக்கனும்... அதுக்கு என்ன முடிவுன்னு சொல்லுங்க" - இளைஞர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக பிரச்சாரத்தின்போது, இளைஞர் ஒருவர் மதுவை ஒழிக்க முடிவு சொல்லுங்க என கேட்டதும் திமுக வேட்பாளர் பதில் சொல்ல முடியாமல் நழுவி சென்றார். விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு நின்றிருந்த இளைஞர், வேட்பாளரிடம் மதுவை ஒழிக்கனும்.. அதுக்க என்ன முடிவுன்னு சொல்லுங்க என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க முடியாமல் திமுக வேட்பாளர் நழுவி சென்ற நிலையில், கேள்வி கேட்ட இளைஞரை திமுக உடன்பிறப்புகள் மிரட்டும் தொணியில் பேசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day