எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து போராடி, அவர்களை இம்மண்ணை விட்டு விரட்டியடித்த மாவீரர் தீரன் சின்னமலையின் 269ஆம் ஆண்டு பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றிடுவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து போராடி, அவர்களை இம்மண்ணை விட்டு விரட்டியடித்த மாவீரர் தீரன் சின்னமலையின் 269ஆம் ஆண்டு பிறந்தநாளை அனைவரும் கொண்டாடும் இந்நாளில் அவர்தம் நினைவை போற்றிடுவோம் என தெரிவித்துள்ளார்.
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றிடும் வகையிலும், அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் புரட்சித்தலைவி அம்மா, தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலையும், மணி மண்டபமும் அமைத்து கொடுத்ததையும், தீரன்சின்னமலையின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததையும் இந்நாளில் மகிழ்ச்சியோடு எண்ணிப்பார்ப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நன்னாளில் போற்றி வணங்கிடுவோம் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.