"10 நாட்களாக இந்த வேலை தான் பார்த்தீர்களா"- ஆட்சியர் சரமாரி கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே புதிதாக வெட்டப்படும் குளத்தை பார்வையிட மாவட்ட ஆட்சியர் வருவதாக வந்த செய்தியையடுத்து, 100 நாள் வேலையாட்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டனர். தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் பகுதியில் உள்ள பெரிய ஏரி அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் புதியதாக குளம் ஒன்று வெட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் 100 நாட்கள் வேலை செய்யும் பணியாளர்கள் ஈடுபட்டு வரும் சூழலில், திடீரென அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து 100 நாள் வேலையாட்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டனர். குளம் வெட்டப்படும் இடத்திற்கு வந்த ஆட்சியர், கடந்த 10 நாட்களில் இந்த பணிகள் மட்டும் தான் நடைபெற்றுள்ளதா என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதுடன், குறிப்பிட்ட நாட்களுக்கும் முழு பணியையும் செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு சென்றார்.

Night
Day