எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாலியல் வன்புணர்வில் ஈடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கர்ப்பிணி முதல் வயதான முதியவர்கள் வரை பாலியல் தொந்தரவு நடப்பது மிகப்பெரிய தலை குணிவு எனவும், பாலியல் வண்புணர்வில் ஈடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் எனவும் கூறினார்.