''மின் கட்டணத்தை உயர்த்தியதே திமுக அரசின் சாதனை'' - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கோட்டையில் அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தின் இரண்டாவது நாளை தொடங்கிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திமுக அரசு மக்கள் நலன் சார்ந்து எதுவும் செயல்படுத்தவில்லை என செங்கோட்டையில் புரட்சித்தாய் சின்னம்மா உரை

திமுகவினர் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால் இப்போது மின் கட்டணத்தை மீண்டும் உயர்ந்தியுள்ளனர். கிட்டத்தட்ட 2 கோடியே 21 லட்சம் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களிடம் இருந்து, சுமார் 1,000 ரூபாய்க்கும் மேல் மின்சாரக் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை.

திமுக அரசு மின்சாரத்துறையை சரியாக நடத்தவில்லை. அம்மா ஆட்சியில் 200 யூனிட் பயன்பாட்டிற்கு ரூ.170 ஆக இருந்த கட்டணத்தை தற்போது கூடுதலாக ரூ.625 வரை உயர்த்தி இருக்கிறார்கள். அதேபோல் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். இப்படி மக்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .

Night
Day