'அரசு விழாக்‍களில் கும்மியாட்டத்திற்கு அனுமதி அளிக்‍க வேண்டும்' - கும்மியாட்டக் குழுவினர் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு விழாக்களில் கொங்கு நாட்டின் கும்மியாட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, திருப்பூர் விழாவில் கும்மியாட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் தில்லை நகரில் பாரம்பரிய கும்மி ஆட்ட குழுவினரின் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் ஒரே சீருடையில் காலில் சலங்கை கட்டிக்கொண்டு பன்னாங்கு பாடி கும்மி அடித்தனர். இரண்டு வயது குழந்தை கும்மியாட்ட குழுவினரோடு இணைந்து ஆடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Night
Day