'புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்'அழைப்பு விடுத்து நிர்வாகிகள் போஸ்டர்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் அஇஅதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து கழக நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளான இந்திராகாந்தி பேருந்து நிலையம், காந்தி சிலை, மயிலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அஇஅதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்றும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டு, தொண்டர்கள், திண்டிவனம் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையேற்று அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சுதாகர், நீலாறு ஏ.ஏழுமலை உள்ளிட்டோர் பெயர்கள் சுவரொட்டிகளில் இடம் பெற்றுள்ளன. 

Night
Day