'விண்வெளி தேவதை சுனிதா வில்லியம்ஸுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டிய விண்வெளி தேவதை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் பல முக்கிய ஆராய்ச்சிகளை செய்ததோடு, விண்வெளியில் அதிக நாட்கள் பயணித்த முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். மேலும், விண்வெளியிலேயே மாரத்தானில் ஈடுபட்ட முதல் நபர் என்ற சாதனையையும், அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு, வரலாற்று சாதனை படைத்துள்ளதன் மூலம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார் என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார். 

இது சுனிதா வில்லியம்ஸின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும், அவர் மென்மேலும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து பெண்ணினத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day