'விஷு' திருநாளை கொண்டாடும் மலையாள மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

'விஷு' திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும், மலையாள மொழி பேசும் மக்‍கள் அனைவருக்‍கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, 'விஷு' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள 'விஷு' தின வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு திருநாளாம் 'விஷு' திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தன் இதயம் கனிந்த 'விஷு' திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

வாழுகின்ற இடங்களில் எல்லாம் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் விடாது பேணிப் பராமரிக்கும் மலையாள மக்கள், விஷு பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து, விஷுக்கனி கண்டு, புத்தாண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டி, இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடுவார்கள்.

இந்நன்னாளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அன்போடு உபசரித்து, அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து மகிழ்வதை மலையாள மக்கள் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தாண்டு, மலையாள மக்களின் வாழ்வில், அமைதியையும், சந்தோஷத்தையும் வழங்கிடும் ஆண்டாக அமைந்திட வேண்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை விஷு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day