'2026 சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா முதலமைச்சராக பொறுப்பேற்கவேண்டும்' - கமுதியில் தொண்டர்கள் சுவரொட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள் சித்திரகுமார், கோமதி ஆகியோர், அப்பகுதியில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம் என வேண்டுகோள் விடுக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Night
Day