ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயல் காரணமாக, பெய்த கனமழையால், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாது கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெருந்துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் கடல்நீர் மற்றும் மழைநீர் புகுந்ததால் உணவு, குடிநீர் இன்றி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கனமழை காரணமாக சுபா உப்பலவாடி, உச்சிமேடு, நாணமேடு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில், இன்று காலை திடீரென கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால், 700க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாததால், உணவு, குடிநீரின்றி கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். 

varient
Night
Day